Translate

Saturday 30 December 2017

பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி

பிறப்பு இறப்பு ஒரு வருடத்திற்க்குள் பதிவு செய்யவில்லைன்னா அலைய வேண்டியது தான்.! முழு விபரம்..என்ன.?
பதிவு செய்ய கால கெடு
ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்,
தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரணத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்
ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை
நீதிமன்ற உத்தரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்
பிறப்பு- இறப்பு பதிவாளர்:-
பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்நகராட்சி பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்)
நீதி மன்றத்தில் மனு செய்வது எப்படி.?
நீதிமன்றத்தில் உத்தரவு பெற சமந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ) பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்
பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.இதை நம்மூர் ஆட்களுக்கும் வெளியூர் ஆட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபாபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது Save செய்து கொள்ளுங்கள்.அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் .
பிறப்பு சான்றிதழ் பெற -http://www.chennaicorporation.gov.in/o…/birthCertificate.do…
பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள:-
http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
இறப்பு சான்றிதழ் பெற :- http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள- http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
(இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் - Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php…
மதுரை மாநகராட்சி - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி மாநகராட்சி - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி மாநகராட்சி- http://tirunelvelicorp.tn.gov.in/download.html
பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்யும் வழி:-
கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிறந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நிறுபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க) இது பெரிய சிக்கலை உருவாக்குகின்றது.
கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக்கொள்ளலாம்.!
பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள்.
குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சான்றிதழ் இருக்கும் இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்
உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பான தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்.!
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அப்போது பெற்றோர் பெயர், குழந்தை பிறந்த தேதி மற்றும் மருத்துவமனை ஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்ற மாட்டேன்’ என்று பெற்றோர் எழுதிய கடிதம், குழந்தையின் பெயர் இல்லாமல் பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.குழந்தை பிறந்ததுமே பெயரைத் தேர்வு செய்வது இன்னும் நல்லது. விண்ணப்பத்திலேயே குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டால், முதல்முறையிலேயே குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுவிடலாம்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கால வரம்பு உள்ளதா?
இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை மாற்ற முடியாது.
பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எங்கு பெறுவது.?
பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர்
(கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நகல் பெற்றுக்கொள்ளாம்)
ஒராண்டு முடிந்த பின்னர் வட்டாட்சியர் சம்பந்தபட்ட கிராமத்திற்கு தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு- இறப்பு பதிவேட்டினை அனுப்பிவிடுவார் நகல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதி பிறப்பு- இறப்பு ஆவணங்கள் நிரந்திரமாக பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அலுவலகத்தில் மட்டுமே இருக்கும் .சார்பதிவாளர் அலுவலகத்திற்கு போகாது.
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்
நகராட்சி பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்)
மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர்
(சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)
கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பினை பதிவு செய்து மருத்துவரே சான்றிதழ் வழங்க அரசாணை உள்ளது
ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்துகுள் நிகழும் பிறப்பு இறப்புகளை பதிவு செய்ய சுகாதார ஆய்வாளர் பிறப்பு இறப்பு அலுவலராக பணியாற்றுகிறார். மருத்துவ அலுவலர் சான்றிதழ் அளிக்கும் அதிகாரி மட்டுமே! பிறப்பு இறப்பு சட்ட விதிமுறைகளின் படி பிரிவு 12 ல் இலவச சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுகிறது.பெயர் வைத்தவுடன் ரூ.5/ மட்டும் பெற்றுகொண்டு பெயர் பதிவு செய்து பிரிவு 17 ன் கீழ் வழங்கப்படும்.(தற்போது நீதிமன்றத்திற்கு பதில் R.D.O.)

1 comment:

  1. My school mark sheet based date of birth is totally differ from my birth certificate date of birth . How to correct? Plz any of one guide me for this problem .

    ReplyDelete

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...