Translate

Thursday, 11 January 2018

Police Clearance Certificate

POLICE CLEARANCE CERTIFICATE என்ற வார்த்தையை கண்டவுடன் இது காவல் நிலையத்தில் வாங்கக்கூடிய சான்றிதழ் என்று நினைக்காதீர்கள். காவல்நிலையத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இது பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி வெளிநாடு செல்கின்றவர்களுக்கு தேவைப்படுகின்ற சான்றிதழ் ஆகும். பாஸ்போர்ட் பெறுகின்ற அலுவலகத்தில் இதனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். 

முதல் முறையாக வெளிநாடு செல்பவர்களுக்கு இது தேவைப்படாது. நம் நாட்டிலிருந்து வெளிநாடு சென்று அதன்பிறகு நம் நாட்டிற்கு திரும்பி வந்து, மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு இந்தச் சான்றிதழ் அவசியமாகும்.

Police  Clearance Certificate க்குரிய விண்ணப்ப படிவத்தை passportindia.gov.in  என்ற  இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதிலேயே எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இருக்கும்.                                        
3.5 x 3.5 செ.மீ அளவுள்ள புகைப்படம் ஒன்றை ஒட்டி, நிரப்பப்பட்ட விண்ணப்பப்  படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,இணைத்து   சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு எதிராக ஏதேனும் வழக்கு இருந்தால், நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் இருந்து ஒரு  சான்றிதழ் வாங்க வேண்டியதிருக்கும். வழக்கின் தன்மையைப் பொறுத்து இதனைத் தர காவல்துறையினர் மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.  வழக்கு ஏதும் இல்லை என்றால் அது தேவையில்லை.

நீங்கள் வசிக்கும் நகரங்களுக்குரிய பாஸ்போர்ட் அலுவலகங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று நீங்கள் விண்ணப்பிக்கவேண்டும். வேலை நாட்களில் காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றுவிடுங்கள்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். இடைத் தரகர்களை அணுகாதீர்கள்.
காலையில் நீங்கள் விண்ணப்பித்தால் அன்று மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரரே நேரில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.   விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை அவர் சார்பாக வேறு யாரேனும் கொண்டு சென்றாலும் போதுமானது.

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...