Translate

Wednesday 7 February 2018

(ஹெல்மெட்) தலை கவசம் பற்றிய சில தகவல்கள்:-

பைபர் கிளாஸ், பைண்டர் ரெசின்,
யூ.வி.ஸ்டேபிலைசெர் இவற்றின் உதவியுடன் பல
அடுக்குகளாக கொண்டு தயாரிக்கபடுகிறது.இதில்
ஒவ்வொன்றும் பல தரத்தில் இருக்கிறது. நல்ல தரமான
பொருட்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்க
பட்டதை வாங்கவேண்டும். இதை நம்மால்
அறிந்து கொள்ள இயலாது என்கிற
போது ஒரே வழி சிறந்த கம்பெனிகளின்
நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி
வாங்குவதுதான். சாலை ஓரங்களில்
விற்கபடுபவை எந்த
அளவிற்கு தரமானவை என்று சொல்ல முடியாது.

* எடை 800 கிராமுக்கும் 2 கிலோவுக்கும்
இடைப்பட்டதாக இருக்கும் தரமானவைகள்.

* உள்ளே இருக்கும் துணியை விலக்கி பார்த்தால்
கரடு முரடாகவோ, மணல் துகள்கள்
இருந்தாலோ வாங்காதீர்கள். இது போலி.

*எடை அதிகமுள்ள ஹெல்மெட்
தவிர்த்துவிடுங்கள்...இஞ்ஜக்சன் மோல்டிங் வகையில்
கிடைக்கிறது...விலை
அதிகம், ஆனால்
அணிந்திருப்பது அவ்வளவாக சுமையாக
தெரியாது.
தரமில்லாத ஹெல்மெட் போட்டும் பிரயோசனம்
இல்லை,
விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால்
தலைக்கும் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த
வாய்ப்பு இருக்கிறது.
எனவே விலையை பார்க்காமல்
தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற
உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை.

ஏன் அணியவேண்டும்?!
சாலை விபத்துகளில் அதிகமாக
நடப்பது இருசக்கரவாகனத்தால் என்கின்றனர்.
எனவே அவசியம் ஹெல்மெட்
அணிவது உயிரிழப்பை தடுக்கும்.
ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில்
பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம்
சும்மா என்று ஆய்வுகள் சொல்கின்றன.
எனவே நம்பாதிர்கள். உண்மையில் இதை அணிவதனால்
தலைக்கு பாதுக்காப்பு என்பதுடன் மறைமுகமாக
வேறு பல நன்மைகள் இருக்கின்றன
என்பதை யோசித்து பார்த்தால் புரியும்.

* பிற வாகனங்களின்
இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சப்தம்,
வாகனங்களின் இரைசல் ஒலி போன்றவற்றில்
இருந்து பாதுகாக்கிறது.

* ஆடி மாத காற்றில் இருந்து ஓரளவு தப்பிக்கும்
காது.

* தூசிகள், மாலை இரவு நேரங்களில்
சாலையில் எதிர்வரும் பூச்சிகளில்
இருந்து கண்ணையும் காதையும்
காத்துக்கொள்ளலாம்.

* மிக முக்கியமா செல்போன் அடிச்சா கேட்காது,
வைபிரேசன் மூலம் தெரிந்தாலும்
வண்டி ஓட்டிகொண்டு போகும் போது பேச
முடியாது !!
(அதுதான் நாங்க ஹெட் போன்
போட்டுப்போமே என்கிறீர்களா !
ம்...விதி யாரை விட்டது!)
தெருவுக்கு தெரு இங்கே போலிஸ் நிற்கிறார்கள்
போடாதவர்களை பிடித்து ஸ்பாட் பைன்
போடுகிறார்கள், வழக்கும்
பதிவு செய்யபடுகிறது. கமிஷனர்
உத்தரவு போட்டதற்காக அணியவேண்டும்
என்பதை விட நம் உயிர் முக்கியம்
என்பதை உணர்ந்து அணியவேண்டும்...நெல்லையில்
தானே இந்த உத்தரவு கடுமையாக்கபட்டிருக்கிறது.
நமக்கு இல்லையே என்று நினைக்காமல் ஹெல்மெட்
வாங்கி அணியுங்கள்...அனைத்து ஊர்களுக்கும்
உத்தரவு போட பட்டு இருந்தாலும் இன்னும் சரி வர
கடைபிடிக்க படவில்லை.
சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல
போக முடியல, வியர்வையால் பெரும் சிரமமாக
இருக்கிறது என்று. சின்ன சின்ன அவஸ்தை,
அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா?
என யோசித்து பாருங்கள்...நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள் !!
புரிந்து கொண்டு செயல்
படுங்கள்...பெறுவதற்க்கறிய இந்த மானிட
பிறப்பை சரியாக வாழ்ந்து முடிக்கும் முன்னே,
அனாவசியமாக சாலையோரத்தில்
உயிரை விட்டு விடகூடாது...
ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள்...வீட்டில் உங்கள்
மனைவியும் குழந்தைகளும்
உங்களுக்காக காத்திருக்கிறார்கள்
என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...