Translate

Wednesday 7 February 2018

#விந்தணு_எண்ணிக்கையை_இயற்கைவழியில்_அதிகரிக்கும்_சில_வழிகள்

ஒரு மாதிரி விந்துவில் எவ்வளவு விந்தணு உள்ளதோ, அதைப் பொருத்து தான் ஒரு ஆணின் கருவளத்தின் ஆரோக்கியம் சொல்லப்படுகிறது. தற்போதைய உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கை என்பது ஒரு மில்லிமீட்டர் விந்துவில் 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது ஒரு மாதிரியில் குறைந்தது 39 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்.

10 மில்லியனுக்கும் குறைவான அளவில் விந்தணுக்கள் இருந்தால், அது அசாதாரணமாக மற்றும் ஆண்களின் கருவளக் குறைவைக் குறிப்பதாக கருதப்படுகிறது. ஒரு ஆணின் ஹார்மோன்களை பாதிக்கும் எந்த ஒரு விஷயமும், விந்தணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். முக்கியமாக ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் எந்த ஒரு காரணியும், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பெரிதும் பாதிக்கும்.

தற்போதைய காலத்தில் ஆண்கள் வருத்தம் கொள்ளும் விஷயங்களுள் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. இதற்கு முதன்மையான காரணமே வாழும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். முக்கியமாக இன்றைய ஆண்களது புகைப்பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் தான் விந்தணுக்களை பாதிக்கிறது.

இக்கட்டுரையில் ஒரு ஆணின் விந்தணு எண்ணிக்கையை இயற்கை வழியில் அதிகரிக்கும் சில சிறப்பான எளிய வழிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த சில உண்மைகள்!

* உடற்பயிற்சி மற்றும் தூக்கம் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

* விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க மருந்தியல் அல்லாத இயற்கை வழிகளைப் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.

* புகைப்பிடித்தல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தையும் தான் முக்கியமாக பாதிக்கிறது.

* விந்தணு மிகவும் குறைவாக இருக்கும் ஆண்களுக்கு சில மருந்துகள் கட்டாயமாக பரிந்துரைக்கப்படலாம்.

மேற்கத்திய ஆண்களே அதிகம்

பல தசாப்தங்களாக, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் விந்துவின் தரம் மற்றும் கருத்தரித்தல் வீதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2017 ஆம் ஆண்டின் படி, 1973-க்கும், 201 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், வட அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் சராசரியாக விந்தணு எண்ணிக்கை 59.3 சதவீதம் குறைந்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த விந்தது எண்ணிக்கை குறைபாட்டிற்கு மருந்தியல் அல்லாத பழங்கால, #அக்குபங்சர்,  #மூலிகை மற்றும் பாரம்பரிய #வைத்தியங்கள் நல்ல பலனைத் தந்து, ஆண்களின் கருவளத்தை மேம்படுத்தி, காதல் வாழ்க்கை சிறப்பாக்குகிறது. ஆய்வாளர்களும் இதை ஒப்புக்கொள்ளத் தான் செய்கிறார்கள். கீழே விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கண்ட கண்ட மருந்துகள்

சில வகை மருந்துகள் தற்காலிகமாக ஆரோக்கியமான விந்தணுவின் உற்பத்தியைக் கணிசமாக குறைக்குமாம். அதில் சில ஆன்டி-பயாடிக்ஸ், ஆன்டி-ஆன்ட்ரோஜென், ஆன்டி-சைகோடிக், கார்டிகோஸ்டெராய்டுகள், அனாபாலிக் ஸ்டெராய்டுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவைகளை ஆண்கள் எடுப்பதைத் தவிர்த்தால், விந்தணு எண்ணிக்கை குறைவது தடுக்கப்பட்டு, விந்தணுவின் எண்ணிக்கை உடலில் எப்போதும் ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படும்.

வெந்தயம்

மோசமான விந்து ஆரோக்கியம் மற்றும் விந்தது எண்ணிக்கை குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் சிறப்பான உணவுப் பொருளாக பழங்காலம் முதலாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விந்து குறைபாடு இருக்கும் ஆண்கள் அன்றாடம் வெந்தயத்தை சாப்பிடுவதோடு, அன்றாட உணவில் சேர்த்து வந்தால், விந்து உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம்

விந்துவின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள். ஆகவே விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள், வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அஸ்வகந்தா

பழங்காலம் முதலாக பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க அஸ்வகந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ள 46 ஆண்களுக்கு தினமும் 675 மிகி அஸ்வகந்தா என 90 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்ததில், 167 சதவீதம் விந்தணு எண்ணிக்கை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும். பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதில் விந்துவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக கருதப்படுவது செலினியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, க்ளுட்டாதியோனைன், கோஎன்சைம் Q10, ஐ-கார்னைடின் போன்றவைகளாகும். இச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

போதிய அளவு ஃபோலேட் மற்று ஜிங்க்

ஜிங்க் மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்த உணவுகள் ஒட்டுமொத்த விந்தணுவின் ஆரோக்கியமான விந்தணு உற்பத்தி, தரம் போன்றவற்றை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஆண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆரோக்கியமான கொழுப்பு

பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6, விந்து சவ்வின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். சில ஆய்வுகளில் இந்த இரண்டு அத்தியாவசிய ஒமேகா பொருட்களை சரிசம அளவில் எடுக்கும் போது, விந்தணுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...